×

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அசாம் காங். தலைவர் ராஜினாமா

கவுகாத்தி: அசாம் மாநில பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததால், அக்கட்சியின் மாநில தலைவர் ரிபூன் போரா தனது பதவியை ராஜினாமா செய்தார். அசாமில் ஆளும் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் அசாமில் மட்டுமே பாஜக தலைமையிலான ஆட்சி அமையவுள்ளது. அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக கூட்டணி 75 இடங்களிலும் (பாஜக 60, ஏஜிபி 9, யுபிபிஎல் 6), காங்கிரஸ் கூட்டணி 50 இடங்களிலும் (காங்கிரஸ் 29, ஏஐயுடிஎப் 16, பிபிஎப் 4, சிபிஐஎம் 1), மற்ற கட்சிகள் 1 இடத்தையும் கைப்பற்றி உளளன. இந்நிலையில், அசாமில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், அக்கட்சியால் வெற்றி பெறமுடியவில்லை. அதையடுத்து, அக்கட்சியில் அசாம் காங்கிரஸ் தலைவர் ரிபூன் போரா, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், ‘அசாமில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தற்கு பொறுப்பேற்று எனது ராஜினாமா செய்கிறேன். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நடத்திய வகுப்புவாத அரசியலை எதிர்த்துப் போராட முடியவில்லை. இந்திய தேசிய காங்கிரசின் சித்தாந்தத்தை மதிக்கும் அர்ப்பணிப்புள்ள காங்கிரஸ்காரன் என்ற முறையில், எனது அரசியல் ரீதியான போராட்டத்தைத் தொடருவேன் என்பதை உறுதியளிக்கிறேன்’ என்று அந்த ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்….

The post தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அசாம் காங். தலைவர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Assam Congress ,Guwahati ,Congress ,Assam ,assembly ,president ,Riboon Bora ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தனது...